சூடான செய்திகள் 1

மின்சாரத் தடைக்கான காரணம் வெளியாகியது…

(UTV|COLOMBO) மின்சாரத் தடை தொடர்பிலான பிரச்சினைகளை ஆராய்ந்து அதனை நிவர்த்திப்பதற்கான யோசனைகளை முன்வைப்பதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய, நேற்றுக் கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த குழு நியமிக்கப்பட்டதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தகுழுவில் அமைச்சர்களான ரவீ கருணாநாயக்க, கபீர் ஹாசீம் மற்றும் ஹர்ச டி சில்வா ஆகியோர் அடங்குகின்றனர்.

நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது மின்சார விநியோக பிரச்சினை குறித்து ஜனாதிபதியினால் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கிடையில் நிலவும் முறுகல் நிலையே இந்த நிலைமைக்கான காரணம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் சிங்கள புதுவருடத்தின் பின்னர் மின்சாரத்திற்கான கேள்வி மீண்டும் அதிகரிக்க கூடும் என மின் பொறியிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌம்யா குமாரவடு இதனை தெரிவித்துள்ளார்.

புதுவருடம் காரணமாக பல தொழிற்சாலைகள், தொழில் தளங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை வழங்கப்படும்.

இதன் காரணமாக மின்சாரத்திற்கான கேள்வி குறைவடையும்.

எனினும், போதிய மழை வீழ்ச்சி கிடைக்க பெறாவிட்டால் ஏப்ரல் மாதம் 20ம் திகதியின் பின்னர் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிக்கும் என மின் பொறியிலாளர்கள் சங்க தலைவர் சௌம்யா குமாரவடு தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதிக்குள் மின்சார தடை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரவீ கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று

குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் நேவி சம்பத் கைது

மதுபானத்தின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு