உள்நாடு

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுமாறு மீண்டும் மீண்டும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தேவையற்ற மின்விளக்குகள் மாத்திரமன்றி அத்தியாவசிய மின்விளக்குகளின் பாவனையையும் மட்டுப்படுத்துமாறு மின்சார சபையின் புதிய பதில் பொது முகாமையாளர் கலாநிதி ரொஹந்த அபேசேகர, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனது கடமையை ஆரம்பிக்கும் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. முடியாத நேரங்களை தவிர்த்து அனைத்து நேரங்களிலும் மின்சாரத்தை வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்காக மக்களின் ஆதரவும் எங்களுக்கு அவசியமாக உள்ளது. மக்கள் தேவையற்ற மின்சார பயன்பாட்டினை நிறுத்தி உதவ வேண்டும்.

அவசியமான மின்விளக்குகளின் பயன்பாடுகளையும் மட்டுப்படுத்திக் கொண்டு சிக்கனமாக செயற்படுமாறு நான் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த முதல் செயற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார்

தேசபந்துவைத் தேடி முன்னாள் எம்.பி சாகலவின் அலுவலகத்திற்குள் நுழைந்த CID

editor

தனக்கு உள்ள ஒரேயொரு சவால் – நாமல்

editor