வகைப்படுத்தப்படாத

மின்சாரத்தை சிக்கனமாக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

(UDHAYAM, COLOMBO) – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி, தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

30 வருடங்களுக்குப் பின்னர், மூன்று பருவப் பெயர்ச்சி மழையை எதிர்பார்த்த போதிலும் அவை உரிய காலத்தில் பெய்யவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன் காரணமாக மின்னுற்பத்திக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது. எரிசக்தி பாதுகாப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நடைபெற்ற வருடாந்த கற்கைநெறியில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் எரையாற்றுகையில் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

Related posts

විරෝධතාව හේතුවෙන් කොළඹ පුරහල අවට මාර්ගවල රථවාහන තදබදයක්

இலங்கையின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம்

කොළඹ ප්‍රදේශ කිහිපයකට අද අඩු පීඩනයෙන් ජලය