உள்நாடு

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – வறட்சியுடனான வானிலையால் நாளாந்த நீர்மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நாளாந்தம் 5 வீத நீர்மின் உற்பத்தியே முன்னெடுக்கப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 69 வீதமாக காணப்படுவதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

காசல் ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 53 வீதமாகவும்
மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 63 வீதமாகவும்
கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 54 வீதமாகவும்
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 79 வீதமாகவும் காணப்படுவதாக சுலக்‌ஷன ஜயவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வறட்சியான வானிலை தொடர்வதால் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு, பாவனையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts

மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

சாட்சியமளிக்க அனுமதி கோரி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரிப்கான் பதியுதீன் கடிதம்

நாட்டிற்கு வருவோருக்கு PCR பரிசோதனை கட்டாயம்