இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன எச்சரித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பொருளாதாரம் குறித்த தனது புரிதலுக்கு அமைவாக, நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் நாடு வீழ்ச்சியடையும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால், பாராளுமன்ற உறுப்பினர் பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இலங்கையை மீட்டெடுக்க தயாராக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.