உள்நாடு

மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க யோசனை – நரேந்திர டி சில்வா.

(UTV | கொழும்பு) –

நாடளாவிய ரீதியில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, அனல் மின்சாரத்தை பெறுவதற்கு செலவிடப்படும் உற்பத்திச் செலவை ஈடுசெய்யும் வகையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை, மீண்டும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனவரி மாத மின் கட்டணத்தை ஒக்டோபர் மாதமே திருத்தியமைக்க கோரிக்கை விடுத்ததாக மின்சார சபையின் பொது முகாமையாளர்​ நரேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி மீண்டும் ஒருமுறை மின்சார கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வருடம் எதிர்பார்த்த அளவு நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனதால் மின்சார உற்பத்திக்கு கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு, 4,500 கிகாவோட் மணிநேரம் நீர்மின் திறன் எதிர்பார்க்கப்பட்ட போதும், 3,750 கிகாவோட் மணிநேரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அனல் மின் நிலையங்களில் இருந்து 750 கிகாவோட் மணிநேரம் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும், அதற்காக மேலதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு மின்சார உற்பத்திக்காக செலவிடப்படும் மேலதிக தொகையை ஈடுசெய்யுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் நேற்று இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள கட்டண திருத்த முறையின் படி, ஜனவரி மாதம் நடைபெறவிருந்த மின்சார கட்டண திருத்தத்தை ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாக கலாநிதி நரேந்திர டி சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வினவிய போது, ​​மின்சார சபையின் கோரிக்கையை பரிசீலிக்க உள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, லீகோ நிறுவனம் இந்த மாதம் முதல் மின்சார கட்டணத்துடன் 2.5 சதவீத சமூக பாதுகாப்பு வரியை சேர்க்க தீர்மானித்துள்ளது. இது செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அடுத்த மாதம் வாடிக்கையாளர் பெறும் மின் கட்டணத்தில் புதிய வரியும் உள்ளடக்கப்படும் எனவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரவி மற்றும் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

MV-Xpress pearl கப்பலை அகற்றும் பணிகள் நவம்பரில்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்