உள்நாடு

மின்கட்டணத்தினை அதிகரிக்க யோசனை

(UTV | கொழும்பு) – மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் இது தொடர்பில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினூடாக அரசாங்கத்திடம் யோசனை ஒன்றினை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், மின் உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளதால், அதனை சமப்படுத்தும் நோக்குடன் மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் யோசனை முன்வைத்துள்ளதாக மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ரூ நவமணி குறிப்பிட்டார்.

தற்போது ஒரு மின் அலகிற்கு 16 ரூபா அறவிடப்படுகிறது. எனினும், ஒரு அலகு மின்னுற்பத்திற்கு அதனை விட அதிக செலவு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

இறுதிக் கிரியைக்கான திகதி சற்று முன்னர் அறிவிப்பு

ஏப்ரல் 21 : வழக்கு தொடரும் அதிகாரம் தெரிவுக்குழுவுக்கு இல்லை

A/L பரீட்சை இன்று ஆரம்பம்- 346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்