உள்நாடு

மினுவாங்கொடை பொலிஸ் நிலைய சேவைகள் மீள ஆரம்பம்

(UTV | கம்பஹா) – மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் ஒருவருக்கு நேற்று(08) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த பொலிஸ் நிலையத்தின் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வேறு பொலிஸ் நிலையங்களில் இருந்து 80 பேர் கடமைகளில் அமர்த்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தொற்று நீக்க நடவடிக்கைகளையடுத்து, மினுவாங்கொடை பொலிஸ் நிலையம் மீள திறக்கப்பட்டதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.

மேலும், மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Related posts

ரவி சேனவிரத்ன அதிரடியாக கைது!

இலங்கையில் வசிக்கும் சவூதி மக்களை உடன் நாடு திரும்புமாறு அறிவுறுத்தல்

ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று