உள்நாடு

மித்தெனிய முக்கொலை – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

மித்தெனிய முக்கொலை சம்பவம் தொடர்பாக வீரகெட்டிய பொலிஸ. நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீரகெட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள மித்தெனிய பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (03) மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜூலம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களுக்கு 12 T-56 துப்பாக்கி வெடிமருந்துகளை இந்தச் சந்தேக நபர் வழங்கியதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

18 ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அருண விதானகமகே மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பொதுமக்கள் தினம் நாளை இடம்பெறாது

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார் விஜயதாஸ ராஜபக்ஷ

editor

இலங்கை துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி கப்பல்!