விளையாட்டு

மிதாலி ராஜ் சாதனை

(UDHAYAM, COLOMBO) – இந்திய மகளிர் கிரிக்கட் அணியின் தலைவர் மிதாலி ராஜ், மகளிர் ஒருநாள் கிரிக்கட் பிரிவில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் 69 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரத்து 28 ஓட்டங்களைப் பெற்று இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

முன்னதாக 5 ஆயிரத்து 992 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்தின் அணித்தலைவர் சார்லட் எட்வர்ட்ஸ் இந்த சாதனையைப் படைத்திருந்தார்.

34 வயதான மிதாலி ராஜ் 1999ம் ஆண்டு முதல் 183 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 10 டெஸ்ட் மற்றுமம் 63 20க்கு20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

Related posts

ICC விருதுகள் பரிந்துரையில் 4 இலங்கை வீரர்கள்

தென்னாபிரிக்கா தொடர் இரத்தாகுமா?

2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் துடுப்பாட்டம்