உலகம்

மாஸ்க் அணிவதும் அணியாததும் தனிநபர் விருப்பம்

(UTV | இங்கிலாந்து) – டெல்டா வைரஸ் கொரோனாவால் இங்கிலாந்தில் மூன்றாவது அலை உருவாகி இருக்கிறது. இந்த நாட்டில் முதல் மற்றும் 2 வது அலை ஓய்ந்து கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது டெல்டா வைரசால் 4 மாதங்களுக்குப் பிறகு இங்கிலாந்தில் தினசரி பாதிப்பு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் அங்கு தற்போது பாதிப்புகள் குறைந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிவதை விரும்பவில்லை எனவே அதனை தனிநபர் விருப்பம் சார்ந்த விவகாரத்திற்கு கொண்டு சென்று இனி முகக்கவசம் அணிவது தனி நபர் விருப்பம் என அறிவிக்கப்பட உள்ளது.

மேலும் இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொள்வது தொடர்பாக வரும் 19 ஆம் தேதி அரசு பரிசீலிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

டிசம்பரில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து அறிமுகம்

பிரான்சில் திங்கள் முதல் ஊரடங்கை தளர்த்த தீர்மானம்

பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு மலேசியா அரசு தீர்மானம்