காலம் சென்ற மாவை சேனாதிராஜா அவர்கள் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியோடு மிக நீண்ட காலமாக நல்லதொரு தொடர்பை ஏற்படுத்தி, அவர் தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் முஸ்லிம் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டு செயற்பட்டதையிட்டு மகிழ்ச்சியுடன் கௌரவத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னார் கடந்த காலங்களில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி மேற்கொண்ட அனைத்து விதமான சமூக நல்லிணக்கமிக்க வேலைத் திட்டங்களில் அன்னாரது பங்களிப்பையும் தந்து உதவியதையிட்டு இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.
ஆகவே, அன்னாரது சேவை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல், அப் பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் மக்களுக்கும் தமது பிரநிதித்துவத்தின் மூலம் அனைத்து விதமான சேவைகளிலும் அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கும் சேவை செய்ததையிட்டு, மிகவும் கௌரவத்துடன் நான் நினைவு கூறிக் கொள்கிறேன்.
ஆகவே, அவரது இழப்பு தமிழ் மக்களுக்கு மாத்திரமல்லாமல் வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லிம்களுக்கும் ஒரு பேரிழப்பாகும் என்பதை இத் தருணத்தில் ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஷாம் நவாஸ்
தலைவர்
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி