அரசியல்உள்நாடு

மாவை சேனாதிராஜாவின் இழப்பால் தமிழ் மக்களின் அரசியலில் பாரிய இடைவெளி – முத்து முஹம்மட் எம்.பி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் கெளரவ மாவை சேனாதிராஜா அவர்கள் 1942.10.27 அன்று பிறந்து கடந்த 2025.01.29 அன்று தனது 82வது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமான செய்தி,தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த அரசியல் வாதிகளில் ஒருவரான அவர் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் அபிவிருத்திக்காகவும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருடைய சேவை தொடந்து கொண்டே இருந்தது.

இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களின் திடீர் மறைவால் துயரும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

M.I.முத்து முஹம்மட்
பாராளுமன்ற உறுப்பினர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Related posts

எரிபொருள் விலைகளில் மாற்றம் இல்லை

2025 முதல் நடைமுறைக்கு வரும் இ-கடவுச்சீட்டு

மிரிஹான போராட்டத்தில் நடந்த மீறல்கள் குறித்து விசாரணை : மனித உரிமை ஆணைக்குழு