உள்நாடு

கோதுமை மாவின் விலை மேலும் குறைந்தது

(UTV | கொழும்பு) – புறக்கோட்டை மொத்த சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கோதுமை மா ரூ.265க்கு விற்பனை செய்யப்படும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று (19) லங்கா சதொச நிறுவனம் ஆறு பொருட்களின் விலைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோகிராம் பூண்டு ரூ.60 குறைக்கப்பட்டு ரூ.490 ஆகவும், கோதுமை மா ஒரு கிலோகிராம் ரூ.55 குறைக்கப்பட்டு ரூ.320 ஆகவும் இருந்தது.

மேலும், ஒரு கிலோ நெத்தலி கருவாடு ரூ.50 குறைக்கப்பட்டு ரூ.1,450 ஆக இருந்தது.

இதேவேளை, விலை குறைப்பை தொடர்ந்து ஒரு கிலோ பருப்பு ரூ.285க்கு கிடைக்கும்.

மேலும், ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 260 ரூபாவாகவும் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி ஒரு கிலோகிராம் 5 ரூபாவினால் 169 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Related posts

மாவீரர் தினத்திற்கு கடும் எதிர்ப்பு – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்பும் IMF

editor

எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக மனு மீதான பரிசீலனை இன்று