உள்நாடு

மாவீரர் தினத்திற்கு கடும் எதிர்ப்பு – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

(UTV | கொழும்பு) –

எதிர்வரும் நாட்களில் வடக்கு கிழக்கில் இடம்பெறவுள்ள சட்டவிரோத “மாவீரர் தின நிகழ்வுகள்” தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளர் ஆகியோர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதிமொழி ஒன்றை வழங்கினர். இதன்போது, பொதுச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இம்மாதம் 27ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நடைபெறவுள்ள சட்டவிரோத மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, ​​பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பணியகத்தின் பணிப்பாளர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம இந்த உறுதிமொழியை வழங்கினார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க விசேட வைத்தியசாலைகள்

விளையாட்டுத்துறை அமைச்சரின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பாலிந்த

பொம்பியோ நாளை இலங்கைக்கு