உள்நாடு

மாவடிப்பள்ளி பாலத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் – சந்தேக நபர்கள் அரபுக் கல்லூரிக்குள் நுழைந்தால் பிணை இரத்து

மாவடிப்பள்ளி பாலத்தில் உழவு இயந்திரம் வெள்ள நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அரபுக் கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீண்டும் அரபுக் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தால் பிணை இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்கபடுவார்கள் என சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி கே. கருணாகரன் புதன்கிழமை (18) உத்தரவிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் விரிவான அறிக்கை கிடைக்கப் பெறும் வரை வழக்கு, விசாரணைகளுக்காக மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மன்றுக்கு ஆஜரான சம்மாந்துறை, காரைதீவு பிரதேச செயலாளர்கள், நீர்ப்பாசன பொறியியலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், பொலிஸார் ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அரச அதிகாரிகள் சரியான முறையில் தமது கடமைகளை செய்ய தவறி விட்டார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இதுவரை 454 பேர் தனிமைப்படுத்தலுக்கு

SLFP அரசிலிருந்து விலகத் தயார் : இன்று மாலை ஜனாதிபதியுடன் சந்திப்பு

வீதி விபத்துக்களைக் குறைக்க மீளவும் மதிப்பெண் முறை