உள்நாடு

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு – மூவர் கைது

(UTV|கொழும்பு)- கொழும்பு மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30 ஆம் திகதி மாளிகாவத்தை பகுதியிலுள்ள கட்டடத் தொகுதியொன்றுக்கு அருகாமையில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது

சம்பவம் தொடர்பில் கடந்த 31 ஆம் திகதி ஏற்கனவே ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார் .

இந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மாளிகாவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதியில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்

Related posts

G.C.E (A/L) விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 05 முதல் ஜூன் 19 வரை!

இதுவரை 823 கடற்படையினர் குணமடைந்தனர்

15 வயது மாணவனும் மாணவியும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வௌியான திடுக்கிடும் தகவல்கள்