உலகம்சூடான செய்திகள் 1

மாலைதீவு ஜனாதிபதிக்கு சூனியம் செய்ய முயன்ற அமைச்சர் கைது!

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது மூயிஸிற்கு எதிராக செய்வினை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் அவரது கட்சியைச் சேர்த்த அமைச்சர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாலைத்தீவு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஷாம்னாஸ் சலீம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சராக பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் செய்வினை செய்வதற்கு முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர்களுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எவ்வாறாயினும் அவர்களின் இவ்வாறான முயற்சிக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

மாலைத்தீவில் செய்வினை பாரிய குற்றமாக கருதப்படாத போதிலும் இஸ்லாமிய சட்டத்தின் கீழ் ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

மூன்று நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பம்

நாளையும் CID யிற்கு நாமல் ராஜபக்ஷ அழைப்பு