வகைப்படுத்தப்படாத

மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் – 139 பேர் கைது

(UTV|MALDIVES)-மாலத்தீவின் அதிபர் அப்துல்லா யாமீன், அங்குள்ள 12 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்திருந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள எம்.பிக்களையும் எதிர்கட்சி தலைவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தனது பதவியை தக்க வைத்து கொள்வதற்காக, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையே, அதிபர் அப்துல்லா யாமீன் வீட்டுக்காவலில் வைத்தார். மேலும், முன்னாள் அதிபர் மவுமீன் அப்துல் கயூமையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி 5-ம் தேதி நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்து அதிபர் யாமீன் உத்தரவிட்டார். இதனால், அரசு அலுவலகங்கள் அனைத்தும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. இந்த அவசர நிலை பிரகடனம் மார்ச் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 139 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்நாட்டின் அவசரநிலை விதிகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“I Have not been officially issued summons to appear before the PSC” – Army Commander

Navy apprehends Indian fishermen for poaching in Lankan waters

Kim Kardashian West drops Kimono brand name