உள்நாடு

மாரடைப்பால் இளம் வயதினர் உயிரிழப்பது அதிகரிப்பு – கொழும்பு மரண விசாரணை அதிகாரி.

(UTV | கொழும்பு) –

மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களில் இலங்கையில் 50 வயதுக்குட்பட்ட 100 பேர் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழந்துள்ளதாக கொழும்பு மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை நீதிமன்றத்தினால் கடந்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 1500 பிரேத பரிசோதனைகள் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 50 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் 200 மரணங்கள் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயால் ஏற்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

அண்மைக்காலத்தில் ஏற்பட்ட திடீர் மரணங்களில் அதிகமானவை மாரடைப்பு காரணமாக ஏற்பட்டவை எனவும் இதில் இளைஞர்கள் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துவருவதாகவும் சட்டத்தரணி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இராஜாங்க அமைச்சர் அருந்திக பயணித்த வாகனம் விபத்து

ஸ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான UL 116 விமானத்திற்கு சேதம்

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மனுத்தாக்கல் [UPDATE]