கேளிக்கை

‘மாயவன்’ திரைப்படத்தின் அறிவிப்பு

(UTV |  இந்தியா) – சி.வி.குமார் தயாரித்து இயக்கிய ‘மாயவன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சி.வி.குமார் இயக்கத்தில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாயவன்’. வித்தியாசமான கதைகளத்தை கொண்டு உருவான இந்த படம் வெளியான சமயத்தில் பெரிதான வரவேற்பை பெறாமல் போனாலும், சமீபத்தில் கொரோனோ லாக்டவுனின் போது ஓடிடியில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க போவதாக தயாரிப்பாளர் சி.வி. குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Related posts

வில்லன் வேடத்தில் நடிக்க மறுத்த மாதவன்

காதலருடன் எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம்

கூட்டணியாகும் நயன் – சமந்தா