சூடான செய்திகள் 1

மாதம்பிட்டி – ரஜமல்வத்த சந்தி வரையான பகுதிக்கு தற்காலிக பூட்டு

(UTV|COLOMBO)-முகத்துவாரம் , மாதம்பிட்டி வீதி சந்தியில் இருந்து ரஜமல்வத்த சந்தி வரையான பகுதி இன்று(15) இரவு 9 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை இரவு 10 மணி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

நீர் குழாய் பொருத்தும் பணிகள் காரணமாக குறித்த வீதி இவ்வாறு மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி , முகத்துவாரம் ஊடாக கொழும்பிற்கு பிரவேசிக்கும் வாகனங்கள் ரஜமல்வத்த சந்தியில் இடது புறம் திரும்பி அளுத் மாவத்தைக்கு பயணிக்க முடியும் எனவும், முதுவெல்ல மாவத்தையில் இருந்து வௌியேறுவதற்காக வரும் வாகனங்கள் கனுவ சந்தியின் வலது புறமாக அளுத் மாவத்தை ஊடாக மாதம்பிட்டி சந்தியில் இடது புறம் திரும்பி பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 


Related posts

அமரர் தொண்டமானின் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மஹிந்த வசம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின – அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் விபரம்

பேராதெனிய பொறியியல் பீடமானது தற்காலிகமாக மூடப்பட்டது