சூடான செய்திகள் 1

மாதம்பிட்டி இரட்டை கொலை – மேலும் ஒருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – கடந்த மாதம் 15 ஆம் திகதி கிரேன்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டி மயானத்திற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்கேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று பேலியகொடை பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு கிரேன்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

24 வயதுடைய கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கிரேன்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கல்வி அமைச்சு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

2019 – வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில்

பல்கலைக்கழகங்களை அடுத்த வாரம் ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் ரவூப் ஹக்கீம்