சூடான செய்திகள் 1

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

(UTV|COLOMBO) பொகவந்தலாவை – டின்சின் பண்ணையில் அனுமதி பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்களுடன் இன்று அதிகாலை காவல்துறையால் கைது  செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

23 முதல் 43 வயதிற்கு இடைப்பட்ட பொகவந்தலாவை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர்கள், காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி அட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கைக்கான விஜயம் இரத்து

ஆசிரியர் சேவை சங்கத்தினர் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக உயர்வு