உள்நாடு

மாணவ போக்குவரத்து சேவைக்கான கட்டணங்களும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – பாடசாலை போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும் சங்கத்தினால், போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாகன உதிரிபாகங்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமென அந்த சங்கத்தின் தலைவர் எல்.மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் தமக்கான கட்டணத்தை அதிகரிக்கவில்லையென மேற்படி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் நாட்களில் பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

லிட்ரோ கேஸ் விநியோகம் இடைநிறுத்தம்

கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் – கையொப்பமிட்ட ஆளுநர்

ரொஷான் ரணசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்!