உள்நாடு

மாணவ பிக்குகளுக்கு பாலியல் வன்கொடுமை பொலிஸில் முறைப்பாடு

(UTV | ஹோமாகம ) –  மாணவ பிக்குகளுக்கு பாலியல் வன்கொடுமை : பொலிஸில் முறைப்பாடு

ஹோமாகம பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தில் சித்திரவதைக்குள்ளான 03 மாணவ பிக்குகள் ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அபய என்ற சித்திரவதை அறையில் வைத்து கொடூரமான தாக்குதல்கள் நடத்தி, ஆடைகளை களைந்து பாலியல் வன்கொடுமை செய்தமை மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் குறித்தும் முறைப்பாடு செய்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் 02 இடதுசாரி அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று தொடர்ந்தும் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவும்,

அவர்களில் இந்தப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் உள்ளதாகவும் அவர்கள் பொலிஸாரிடம் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரசிலிருந்து விலகிய SLFP உறுப்பினர்கள் விபரம்

இன்று நள்ளிரவு முதல் குறைகிறது அதிவேக நெடுஞ்சாலை பஸ் கட்டணம்

மல்வத்து அஸ்கிரி பீடாதிபதியின் விசேட அறிக்கை