வகைப்படுத்தப்படாத

மாணவர் ஒருவரை தாக்கிய மேலும் 6 மாணவர்கள் கைது

(UDHAYAM, COLOMBO) – அநுராதபுரம் பிரதேசத்தில் முன்னணி பாடசாலை ஒன்றின் 6 மாணவர்களை நேற்று இரவு காவற்துறை கைது செய்துள்ளது.

அந்த பிரதேசத்தில் மேலும் ஒரு பாடசாலையின் மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தற்போது அநுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் நிலையில், காதல் தொடர்பில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை சம்பந்தமான தகவல் வெளியாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

பல்வேறு பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

Bread price goes back down

ஹட்டனில் போலி சுகாதரபரிசோகர்.விலைக்கட்டுப்பாட்டு அதிகாரி என கூறி பணம் கரக்க முற்பட்டவர் தப்பியோட்டம் – [IMAGEs]