உள்நாடு

மாணவர்களை அழைத்து வர நேபாளம் நோக்கி யு.எல் 1424 எனும் விஷேட விமானம்

(UTV | கொழும்பு) – உயர்கல்வியை தொடர்வதற்காக நேபாளம் சென்றுள்ள 94 இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானமொன்று நேபாளம் நோக்கி பயணித்துள்ளது.

நேபாளம் காத்மண்டு நகரில் கல்வி கற்கும் மாணவர்கள் 94 பேர் இன்று(24) நாட்டிற்கு அழைத்து வர யு.எல் 1424 எனும் விமானம் இன்று காலை 8.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேபாளம்
காத்மண்ட் நோக்கி பயணித்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

கொரானா தொற்றினால் வௌிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை நாட்டிற்கு மீள அழைத்துவரும் செயற்பாட்டுக்கு அமைய இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது,

குறித்த விமானத்தில் விமானிகள் உட்பட பணியாளர்கள் எட்டு பேர் பயணித்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறு அழைத்துவரப்படும் மாணவர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

ஆளுங்கட்சியினர் பிரதமரை சந்திக்கின்றனர்

நிலக்கரிக்கு கேள்வி மனுக்கோரல்

ஒப்புதல் இல்லாமல் முக கவசங்களை ஏற்றுமதி செய்ய தடை