உலகம்

மாணவர்களுக்கு கனடாவின் விசேட அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கான கால அளவை 2 வருடங்களாகக் குறைத்து கனடா அரசு உத்தரவிட்டுள்ளது.
கனடாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர், கருத்துத் தெரிவிக்கையில்” கடந்த 2023 ஆம் ஆண்டு 5.60 லட்சம் மாணவர்களுக்கு விசாக்கள் வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 35 சதவீதம் அளவுக்கு மாணவர்களின் விசாக்களை குறைக்க முடிவெடுத்துள்ளோம். இதனால் இந்த ஆண்டு 3.64 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே விசாக்கள் வழங்கப்படும். இரண்டு ஆண்டுகள் வரை மட்டும் அந்த விசா செல்லுபடியாகும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்தியாவில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்

அமெரிக்காவில் ஒரே நாளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

சித்தரவதை முகாமாக இருக்கும் குவான்தனாமோ சிறை