கிசு கிசு

மாடல் அட்ரியானா லீமா காதலரை பிரிந்தார்

(UTV|BRAZIL)-பிரேசிலை சேர்ந்த பிரபல மாடல் அழகி மற்றும் திரைப்பட நடிகை அட்ரியானா லீமா (வயது 37). உலகின் சிறந்த மாடல் அழகிக்கான போட்டியில் 2-வது இடத்தை பிடித்து சூப்பர் மாடல் என்கிற அந்தஸ்தை பெற்றவர்.

இவருக்கும் துருக்கியை சேர்ந்த எழுத்தாளரான மெட்டின் ஹாரா என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 1½ ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் அட்ரியானா லீமா தனது காதலர் மெட்டின் ஹாராவை பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை இருவரும் உறுதி செய்து இருக்கிறார்கள். அதே சமயம் அவர்கள் காதல் முறிந்ததற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

 

 

 

 

Related posts

பதில் ஜனாதிபதியாக ரணில்…

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு

150 மில்லியன் டொலர்களுக்கு வாரிசான பூனை