உள்நாடு

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பம்

(UTV|யாழ்ப்பாணம்) – மனித எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறப்படும் மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் இன்றைய தினம் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் புனர்வாழ்வு வைத்தியசாலைக்கான கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக காணி துப்புரவு பணிகள் இடம்பெற்று வந்தன.

இதன்போது, குறித்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் மாங்குளம் காவற்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

அது தொடர்பில் பொலிசாரின் அறிவுறுத்தலுக்கிணங்க சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.லெனின்குமார், மனித எச்சங்கள் மீட்கப்பட்ட குறித்த இடம் தொடர்பான வரலாறுகளை ஆராயுமாறு காவற்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

குற்றச் செயல்களை ஒழிப்பதற்கான விசேட நடவடிக்கை நாளை ஆரம்பம் – டிரான் அலஸ்.

கொரோனாவின் வீக்கத்தினால் இன்று 201 நோயாளிகள்

முச்சக்கர வண்டிகளது சேவைகள் வழமைக்கு