சூடான செய்திகள் 1

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

(UTV|COLOMBO) அனைத்து மாகாண சபைத் தேர்தல்களும் மே மாதம் 31ம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும் என்பது தொடர்பில் இரண்டு வாரங்களுள் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் ஒன்றினை எட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(12) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாகாண சபைத் தேர்தல்களும் எதிர்வரும் மே மாதம் 31ம் திகதிக்கு முன்னர் விருப்பு வாக்கு முறையில் இடம்பெற வேண்டுமே என்ற யோசனைக்கு ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

Related posts

பாடசாலை அதிபர் ஒருவர் செய்த காரியம்…

மைத்திரியின் பதவி சட்டவிரோதமானததுதான்- ஒப்புக்கொண்ட துமிந்த

ஜனாதிபதியையும் பிரதமரையும் ஆஜராகுமாறு மேல் நீதிமன்றம் உத்தரவு