சூடான செய்திகள் 1

மாகாண ஆளுனர்களும் பதவி விலகல்

(UTV|COLOMBO)-அனைத்து மாகாணங்களின் ஆளுனர்களும் தங்களது பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாணத்திற்கு ஆளுனராக பொறுப்பு வகித்த ரெஜினோல்ட் குரே இந்த தகவலை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் அடிப்படையில் இந்தப் பதவி விலகல் கடிதங்கள் வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாகாணங்களுக்கும் புதிய ஆளுனர்களை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 359 உயர்வு

அலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள் சமர்பிப்பு

விசாக நோன்மதி காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு திட்டம்