உள்நாடு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன

(UTV | கொழும்பு) –    நேற்று மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க மற்றும் மேல்மாகாணத்திலிருந்து வெளியேற முயன்ற 364 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன், மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் சாலைத் தடுப்புகளிலிருந்து 164 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை மீறிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு என்பது பொய்!

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு – 13 அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

ரவி உள்ளிட்ட நான்கு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு