உள்நாடு

மாகாணங்களுக்கு இடையிலான பேரூந்து போக்குவரத்து சேவை ஆரம்பம்

(UTV – கொழும்பு)- அச்சுறுத்தல் மிக்க கொரோனா தொற்று காரணமாக நாட்டில் அதிக அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில், மாகாணங்களுக்கு இடையிலான பேரூந்து போக்குவரத்து சேவையை இன்று(20) முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு வழங்கியுள்ள பரிந்துரைகளுக்கமைய, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சில், பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

எனினும், கடமைகளுக்காக சமூகமளிக்கின்ற அரச மற்றும் தனியார் சேவையாளர்களுக்கு மாத்திரமே போக்குவரத்து சேவை வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நாட்டில் சுமுகமான நிலைமையொன்று ஏற்படும் பட்சத்தில், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டை முழுமையான மாற்றத்திற்கு கொண்டுவர முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

குலாப் சூறாவளி கரையைக் கடக்கக் கூடிய சாத்தியம்

யாழில் நடைபெற்ற நாமல் ராஜபக்சவின் கூட்டம்

editor

மு.க வின் தேசிய பட்டியல் ஹரீசுக்குகண்டியில் ரவூப் ஹக்கீம்

editor