விளையாட்டு

மஹேலவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பதவி

(UTV | கொழும்பு) –  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, இருபதுக்கு20 ஆடவர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போது முதலாவது சுற்றில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக அவர் செயற்படுவார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஐக்கிய அரபு இராச்சியத்தில் உயிர்குமிழி முறைமைகளின் கீழ் மஹேல ஜயவர்தன இலங்கை அணியுடன் இணையவுள்ளார்.

மஹேல ஜயவர்தன தற்போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஓமானில் இடம்பெறவுள்ள இருபது20 உலக்கிண்ணத் தொடரின் முதலாம் சுற்றுப்போட்டிகளில் மாத்திரம், மஹேல ஜயவர்தன இந்த பதவியை வகிப்பார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 19 வயதுக்கு கீழ்பட்ட ஆடவர் இலங்கை அணியின் ஆலோசகராகவும் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

அமைச்சர் பைசர் ஐசிசி முன்னிலையில்

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!

அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் டேவிட் வோர்னருக்கு சத்திர சிகிச்சை