அரசியல்உள்நாடு

மஹிந்த மீண்டும் பிரதமராவாரா?? – திலும் அமுனுகம

(UTV | கொழும்பு) –  மஹிந்த மீண்டும் பிரதமராவாரா?? – திலும் அமுனுகம

மீண்டும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்ற செய்தி உண்மையல்ல என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணளிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது ,

மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அவ்வாறான விடயம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றும் நடைபெறவில்லை.

நிச்சயமாக, அவர் பிரதமராக இருந்தார். பிரதமராக இருக்கும் போது, நாட்டில் பல்வேறு குழப்பங்கள் நிலவின. அப்போதைய ஜனாதிபதியால் கொந்தளிப்பு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை, அவர் பதவி விலக முடிவு செய்தார் என்று நான் கூறுவேன்.

அவர் பிரதமராக, ஜனாதிபதியாக இருந்து நாட்டை மீண்டும் ஒருங்கிணைத்த ஒரே தலைவர். அவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு வர விரும்பவில்லை என்று நான் நினைக்கவில்லை. அதெல்லாம் தவறான தகவல்கள் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“மேர்வினுக்கு தலையில் சுகமில்லை” – மனோ கணேசன் MP

ரணில் சிங்கப்பூர் நோக்கிப் பயணம்

தவறான மருந்து  சீட்டால் பரிதாபாமக உயிரிழந்த குழந்தை