உள்நாடு

மஹிந்த தேசப்பிரியவின் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை

தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் வீடு உடைக்கப்பட்டு தளவாடங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பலாங்கொடை பொரம்பவில் பகுதியில் அமைந்துள்ள வீட்டிலேயே இத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்படுவது இது மூன்றாவது முறை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடை பொரம்ப வீட்டில் கடந்த சில நாட்களாக மஹிந்த தேசப்பிரிய இருக்கவில்லை என்பதோடு நேற்று முன்தினம் (23) பிற்பகல் வீட்டுக்கு வந்தபோது தனது வீடு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

மேலும் வீட்டின் முன் கதவு உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த தொலைக்காட்சி, எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பல தளவாடங்களை திருடிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்வு

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

வங்காள விரிகுடாவில் குறித்த காற்றழுத்த தாழ்வு நிலை