வகைப்படுத்தப்படாத

மஹிந்த அமரவீரவின் அமைச்சு பதவியில் மாற்றமா?

(UDHAYAM, COLOMBO)  – தனது அமைச்சு பதவியில் மாற்றம் ஏற்படுமானால் அது ஜனாதிபதியின் விருப்பத்துடன் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர்ம ஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மஹிந்த அமரவீரவிற்கு நாட்டுக்கு சேவை செய்ய அதிக வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் எமது செய்தி பிரிவு அமைச்சரிடம் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனக்கு வேறு ஒரு அமைச்சு பதவி வழங்கப்படுகிறதா? அது என்ன? என தான் இதுவரை அறியவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Windy condition to reduce from today

National Security Advisory Board appointed

‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடை