சூடான செய்திகள் 1

மஹிந்தவை தோற்கடித்த சக்தி எது? மஹிந்த சொல்லும் கதை

(UTVNEWS | COLOMBO) -தற்போதைய ஆட்சி தொடர்பாக மத்திய வங்கி அறிக்கையினை கவனத்தில் கொண்டால் உண்மை வெளிப்படும் என என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

நாட்டு மக்களால் வாழ முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து பேசுகின்றனர் என்றார்.

மொரட்டுவை மாநகர சபையின் புதிய கட்டட தொகுதியை புதன்கிழமை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசங்கம் 2015 ஆம் ஆண்டு போலி பிரசாரங்களை முன்னெடுத்து சர்வதேசம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து எம்மை தோல்வியடையச் செய்தனர்.

இதனை தற்போது மக்கள் உணர்ந்துள்ளனர். தற்போதைய அரசாங்கம் நாட்டுக்காக ஒன்றும் செய்ததில்லை.

நல்லாட்சியில் சிறந்ததோர் ஜனநாயகத்தை வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால் மாகாணசபைத் தேர்தலை நடத்தாதுள்ளனர். உள்ளூராட்சிமன்ற தேர்தலை பெற்றுக்கொள்வதற்காக இரண்டரை வருட காலம் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த தேர்தல் முடிவுகளைக் கண்டு தேர்தல்களை ஒத்திவைக்கவே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. எமது ஆட்சி காலத்தில் எவ்விதமான அச்சமும் இன்றி தேர்தல்களை நடத்­தினோம். போரின் பின்னர் நாட்டின் பொருளதாரத்தை மேம்படுத்தினோம்.

Related posts

ஹெரோயின் கடத்தலில் ஈடுபடும் குழு மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பேருக்கு அழைப்பாணை

காலி முகத்திடலில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடு