அரசியல்உள்நாடு

மஹிந்தவுக்கு வீடு வழங்கும் தீர்மானக்கூட்டத்தில் அநுரவும் இருந்தார் – ரணில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு விஜேராம வீட்டைக் கொடுத்த நல்லாட்சி அரசாங்கத்தின் கூட்டத்திற்கு மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தானும் கலந்து கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலதிகமாக, வஜிர அபேவர்தன, சாகல ரத்நாயக்க, உதய கம்மன்பில, மனோ கணேசன், பி. திகாம்பரம், சுசில் பிரேமஜயந்த, நிமல் சிறிபால, காஞ்சன விஜேசேகர, சுகீஸ்வர பண்டார, பிரேமநாத் டோலவத்த உள்ளிட்ட அமைச்சர்களும் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை வழங்குவதற்கு அரசாங்கம் சட்டத்தின் மூலம் கடமைப்பட்டிருப்பதாக திரு ரணில் விக்கிரமசிங்க மேலும் வலியுறுத்தினார்.

தற்போதைய ஜனாதிபதி கலந்துகொண்ட கூட்டத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டபூர்வமானது.

Related posts

நாட்டின் பல பாகங்களில் மழை

முல்லைத்தீவு மக்களுடன் முன்னாள் அமைச்சர் றிஷாட் கலந்துரையாடல்

சீரற்ற காலநிலை : மலையக ரயில் சேவையில் பாதிப்பு