கேளிக்கை

மவுனி ராய்’க்கு டும் டும்

(UTV | இந்தியா) – கடந்த 2006ம் ஆண்டில் இருந்து இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் மவுனி ராய். நாகின் சீரியல் மூலம் ஏகத்திற்கும் பிரபலமானார். சின்னத்திரையை கலக்கி வந்த மவுனி ராய் அக்ஷய் குமாரின் கோல்டு படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து அவர் தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஆல்யா பட் நடித்துள்ள பிரமாஸ்திரா படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார் மவுனி.

அவர் துபாய்க்கு சென்ற நேரத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கவே லாக்டவுன் அமுல்படுத்தப்பட்டது. லாக்டவுனின்போது மவுனி ராய் துபாயில் சிக்கிக் கொண்டார். அவர் தன் சகோதரியின் குடும்பத்தாருடன் தங்கியிருந்தார். அந்த நேரத்தில் துபாயை சேர்ந்த பேங்கரான சூரஜ் நம்பியார் மீது மவுனி ராய்க்கு காதல் ஏற்பட்டுள்ளதாம்.

சூரஜும், மவுனியும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்களாம். சூரஜ் மற்றும் அவரின் குடும்பத்தாரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் மவுனி. சூரஜின் பெற்றோரை அப்பா, அம்மா என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில், சூரஜின் பெற்றோருக்கு மவுனி ராயை மிகவும் பிடித்துவிட்டது. அவருக்கும் அப்படித் தான். சூரஜின் பெற்றோருடன் நெருக்கமாகிவிட்டதால் திருமணமும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சின்னத்திரை நடிகை நந்தினிக்கு இரண்டாவது திருமணமா?

இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால்

செல்வராகவனின் மரண மொக்கை ஓடிடியில்