சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கலாம்

(UTV|COLOMBO) நாட்டின் வட அரைப்பகுதியில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமையும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் அடுத்த சில நாட்களில் மேலும் சிறிது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுராதபுரம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடும்.

Related posts

தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம்

சீதா குமாரிக்கு மற்றொரு இராஜாங்க அமைச்சு

editor

இலங்கை-சீஷெல்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து