சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் அதிகரிக்கும்

(UTV|COLOMBO)-நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு , வடமேற்கு மற்றும் தெற்கு கடற்கரையோரங்களில் காலை வேளையில் மழை பெய்யும்.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி , மாத்தறை , அனுராதபுரம், வவுனியா மாவட்டங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காலி ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரப்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலைவேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்

பயணிகளைத் தவிர ஏனையோருக்கு விமான நிலையத்திற்குள் நுழைய தடை

சஜித் உள்ளிட்ட ஐ.தே. க 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம்; ரணிலின் முடிவு என்ன?