சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவுகின்ற மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எத்ரிவு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

அலோசியஸிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

சஹ்ரானின் சகா இந்தியாவில் கைது