சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கலாம்…

(UTV|COLOMBO)-இலங்கைக்கு அருகில் ஏற்பட்ட கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10-20 கிலோ மீற்றர் வரை காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புனித நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தி

பரந்தனில் விபத்து நால்வர் வைத்தியசாலையில்

எட்டம்பிட்டிய காட்டுப் பகுதியில் தீப்பரவல்