வகைப்படுத்தப்படாத

மழையுடன் கூடிய காலநிலை

(UDHAYAM, COLOMBO) – வடக்கு வடமத்திய கிழக்கு வடமேற்கு ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் பல பகுதிகளில் நண்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழை அல்லது இடியுடன் கூடிய மழை குறிப்பிட்ட சில பிரதேசங்களில் நண்பகல் 2.00 மணியின் பின்னர் காணப்படும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வழியான கடற்கரையோரத்தின் சில பிரதேசங்களின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும் என்று திணைககளம் தெரிவித்துள்ளது.

தெற்கிலிருந்து தென்மேற்கு திசையாக காற்று மணிக்கு 20-30 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

கடும் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை காணப்படுவதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

டிரம்புடன் பத்திரிகையாளர்கள் மோதல்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

Navy Apprehends Three with over 2000kg of tobacco & Beedi leaves