சூடான செய்திகள் 1

மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம்…

(UTV|COLOMBO) அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய மாகாணத்திலும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பிரதேசங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

Related posts

பாராளுமன்றம் கலைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

முஸ்லிம் பா.உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்க பிரதமர் கோரிக்கை