உள்நாடு

மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக் கூடும்

(UTV | கொழும்பு) –    நாட்டின் தென் மேற்கு மற்றும் வட மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

குறுகிய காலத்தில் நிலக்கரி கொள்முதல் செய்ய ஸ்பாட் டெண்டர்

🔴 ஆளுனர்கள் விரைவில் ராஜினாமா……!!

கொரோனா தப்பியோடிய நோயாளிகள் : கண்டால் தகவல் வழங்கவும்