உள்நாடு

மழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை இன்று முதல்(18) 21ஆம் திகதி வரை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்குசரிவுப்பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்/

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 08 மரணங்கள் பதிவு

“மஹிந்தவால் தலைமைத்துவம் வழங்க முடியாது” வாசுதேவ

அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றில்